shadow

shadow

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் புதியவகை பட்டுச்சேலைக்கு “அம்மா பட்டுச் சேலை” என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா நேற்று பெயர் சூட்டினார்.

அதேபோல, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு புதிய டிசைன் காட்டன் புடவைகளுக்கு “ஜெயா காட்டன்’ “அம்மா காட்டன்’ என  அவர் பெயர் சூட்டினார்.

10நேற்று அமைச்சர் கோகுல இந்திரா  கும்பகோணம், திருபுவனம் பட்டு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கம், திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்கம், கைத்தறி நெசவாளர் பயிற்சி பள்ளி, தாராசுரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ஆகியவற்றில் நேரில் ஆய்வு செய்தார். அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வரும் புதிய வகை பட்டுச்சேலைகளை பார்வையிட்ட அமைச்சர் புதிய ரக தயாரிப்பு பட்டுப் புடவைகளுக்கு அம்மா பட்டு, ஆராதனா பட்டு, அட்சயா பட்டு, ஸ்ரீ பட்டு, சோழன் பட்டு என பல்வேறு பெயர்களை வைத்தார். மேலும், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் சூரிய ஒளியால் உற்பத்தி செய்யப்படும் மின் சாதனத்தையும் அவர்  இயக்கி வைத்தார். மேலும் அங்கு பணிபுரியும் கைத்தறி நெசவாளர்களிடம் அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் கோகுல இந்திரா ஜெயங்கொண்டம் செங்குந்தபுரம் ஸ்ரீ சுந்தர விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு ஆய்வு செய்ய சென்றார். அங்கு புதியதாக தயாரிக்கப்பட்ட காட்டன் சேலைகளை பார்வையிட்டு நெசவாளர்களின் குறைகளை நேரில் கேட்டு அவர்களின் குறைகளை விரைவில் தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். பின்னர் ஜரிகை வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட புதிய ரக சேலைகளுக்கு “ஜெயா காட்டன்’ என்றும், “அம்மா காட்டன்’ என்றும் பெயர் சூட்டினார்.

Leave a Reply