தமிழக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவினால் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் வதந்தியை பரப்பி வருகின்றனர்

இந்த வதந்தி குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்