ஜனவரி – மார்ச் மாதங்களில் பருவத்தேர்வுகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பருவ தேர்வுகள்வரும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் பருவ தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்துகொண்டு அதன்பிறகு பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.