shadow

மனிதர் நடமாட்டமே இல்லாத இடத்தை விவேகம்’ படத்திற்காக கண்டுபிடித்தோம். மிலன்

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் இந்த படத்தில் பணியாற்றியபோது கிடைத்த தனது அனுபவம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விவேகம்’ படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமை படும் படமாக இது இருக்கும்.

கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது . சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன்.

உழைப்பிலும் அர்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் சார் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். ‘விவேகம்’ படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் சார் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் “விவேகம்” பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்’

Leave a Reply