shadow

கடந்த எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர்களில் ஒருவர் மோகன் என்றும் அவரது படங்களில் பெரும்பாலும் மைக் வைத்து பாடுவதால் அவர் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக் மோகன் நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது

‘சில்வர் ஜூப்ளி ஸ்டார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் முக்கிய கேரக்டரில் மோகன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே, தாதா, பவுடர் ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.