தேசிய நெடுஞ்சாலையில் தூங்கும் குழந்தைகள்

லாக்டவுன் எதிரொலி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர்

கடந்த சில மாதங்களாக அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் விபத்து ஏற்பட்டும் உடல்நல கோளாறு காரணமாக சிலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சின்னஞ் சிறு குழந்தைகளும் மாநிலம் விட்டு மாநிலம் நடந்து செல்வது பெரும் அதிர்ச்சிக்கு உரிய வகையில் உள்ளது. அவர்கள் இரவில் தங்குவதற்கு இடமில்லாமல் சாலை ஓரங்களில் படுத்திருக்கும் காட்சி பெரும் அவலமாக உள்ளது

இது குறித்து நடிகை நக்மா தனது சமூக வலைத்தளத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் சொந்த மாநிலம் செல்லும் வழியில் சாலையோரம் தேசிய நெடுஞ்சாலையில் படுத்துகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படத்தை பார்த்தாவது மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply