புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்:

உச்சநீதிமன்றம் புதிய ஆணை’

புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பயணக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அதற்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஊரடங்கு உத்தரவு காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் செல்ல ரயில், பேருந்துகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பயண செலவை யார் ஏற்பது என்பது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையில் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்பதாகவு மத்திய அரசு பதிலளித்தது. இந்த பதிலை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில், பேருந்து பயண செலவை மாநில அரசே ஏற்று கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

Leave a Reply