shadow

refugeesகடந்த சில நாட்களுக்கு முன்னர் லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற படகு ஒன்று இத்தாலி அருகேயுள்ள மத்திய தரை கடலில் மூழ்கியதில் 400 பேர் பலியாகினர். இந்த விபத்து தற்செயலாக நடந்தது அல்ல என்றும், கிறிஸ்துவ, முஸ்லீம் அகதிகள் இடையே நடைபெற்ற மதமோதல் காரணமாகவே இந்த படகு விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மத்தியதரைக்கடலில் மூழ்கிய படகினை மீட்க அனுப்பப்பட்ட கடற்படையினர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நான்கு பேர்களை உயிருடன் மீட்டு அவர்களிடம் விசாரணை செய்தபோது, ‘படகில் இருந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ அகதிகள் இடையே அவரவர் மதம் குறித்த கருத்துக்களால் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் 12 கிறிஸ்தவர்கள் கடலில் வீசி கொல்லப்பட்டதாகவும்,அதனால் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாகவே படகு நிலை தடுமாறி கடலில் மூழ்கியதாகவும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடற்படையினர் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் தெரிவித்தனர். உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் 12 கிறிஸ்துவ அகதிகளை கடலில் வீசி கொலை செய்த குற்றத்திற்காக 15 முஸ்லிம் அகதிகளை இத்தாலி போலீசார் கைது செய்தனர். கடலில் வீசி கொல்லப்பட்டவர்கள் நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply