என் வீட்டின் முன் மயக்கம் போட்டு விழுந்த இளைஞர்கள்

 கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான கிமீ நடந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் பீகாரில் இருந்து ராஜஸ்தானுக்கு நடந்து சென்ற சில இளைஞர்கள் தன்னுடைய வீட்டின் முன் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாகவும், இதனை சிசிடிவி கேமிரா காட்சி மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி கூறியுள்ளார்.

அதன்பின் அவர்களை தனது வீட்டிற்குள் அழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்ததாகவும் வயிறார சாப்பிட்ட பின் அந்த இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்றதாகவும் ஷமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.