10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மைக்ரோசாப்ட்: அதிர்ச்சி தகவல்

10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மைக்ரோசாப்ட்: அதிர்ச்சி தகவல்

ஏற்கனவே அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களை பணி நீக்க முடியும் நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது

மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் அதிகம் வேலையை நீக்க நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது

உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கை எடுத்துள்ளது

இதனால் அந்நிறுவனத்தின் பணி புரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அடுத்து வேறு எந்த நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையை அறிவிக்கப்படுகிறதோ என்ற அச்சம் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உள்ளது.