மைக்கேல் ஷூமாக்கர், ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். இவர்  கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, ஃபிரான்ஸின் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத வகையில் பனிப்பாறையில் படுகாயமடைந்தார். அதுமுதல் பிரான்ஸ் நாட்டின் கிரனோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் கோமா நிலையிலேயே இருக்கிறார்.

தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் சில உண்மைகளை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். கோமா நிலையில் இருக்கும் ஷூமேக்கர் மீண்டும் பரிபூரண குணமடைய வாய்ப்பு சிறிதும் இல்லை என்றும் அவர் தன் வாழ்நாள் முழுவதும் கோமா நிலையில்தான் இருப்பார் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவலை பிரிட்டன் நாட்டின் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஷுமேக்கரின் உறவினர்கள் இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் ஷுமேக்கர் விரைவில் குணமடைந்து நினைவு திரும்புவார் என தான் நம்புவதாக ஷூமேக்கரின் மனைவி கூறினார்.

Leave a Reply