shadow

பார்முலா 1 சாம்பியன் மைகேல் ஷுமேக்கர் கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக கோமா நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் நேற்று விடுத்த ஒரு அறிக்கையில் மைகேல் ஷுமேக்கர் கோமா நிலையில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வரும் வாய்ப்பு குறைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

ஜெர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த மருத்துவர் குழு, ‘மைக்கேல் ஷூமேக்கரின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் தற்போது இல்லை எனினும் அவர் 14 நாட்களுக்குள் கோமா நிலையில் இருந்து மீண்டு வருவார் என தாங்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் 18 நாட்களுக்கு மேலாகியும் அவர் கோமாவில் இருந்து மீளாததால் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு குறைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் அவரை கோமாவில் இருந்து வலுக்கட்டாயமாக எழுப்பும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், அப்படி செய்தால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன் தினம் மைகேல் ஷூமேக்கருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் சிகிச்சை அளித்ததாகவும், அவர் கொடுத்த தகவலின்படி ஷூமேக்கர் நீண்ட நாட்கள் கோமா நிலையில் இருப்பதற்காக வாய்ப்புகள் தெரிவதாகவும், மேலும் அவருடைய மூளை பாதிப்படையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply