மும்பை அணி இதே போல் செயல்பட்டால் அடுத்த ஐபிஎல் போட்டிகளிலும் அந்த அணியை வீழ்த்துவது கடினம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியாளர்களை ஒருவரான வாட்சன் தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணிக்கு வாழ்த்து தெரிவித்த வாட்சன் அதன் பின் வரும் சீசனிலும் இதே போன்று மும்பை அணி விளையாடினால் அந்த அணியை வீழ்த்துவது கடினம் என்று கூறியுள்ளார்

துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, டீகாக் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதாகவும் மிடில் ஓவரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடுவதாகவும், பந்து வீச்சில் பும்ரா, டிரண்ட் போல்ட் மிகச்சிறப்பாக உலகத்தரத்தில் பந்து வீசுவதாக எனவே அந்த அணியில் எந்த விதமான பலவீனமும் இல்லை என்றும் அதனால் அந்த அணியை வீழ்த்துவது கடினம் என்றும் வாட்சன் கூறியுள்ளார்

வாட்சன் சொல்வதை பார்த்தால் அடுத்த ஐபிஎல் போட்டியிலும் மும்பை அணி சாம்பியன் பட்டம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply