shadow

எம்.எச்.370 விமானத்தை 2 வருடங்களாக தவறான இடத்தில் தேடி வருகிறோம். தேடுதல் குழு விரக்தி

mh370சென்னையில் இருந்து கிளம்பிய இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று காணாமல் போனதை அடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன எம்.எச்370 விமானத்தை தவறான இடங்களில் தேடிக்கொண்டிருப்பதாக எம்.எச்.370 விமான தேடுதல் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேடுதல் குழுவின் அதிகாரி ஒருவர் கூறியபோது, ” எம்.எச்.370 விமானம் கடைசி கணங்களில் கடலுக்கு உள்ளே சீறிப்பாய்ந்தது என்று கூற முடியவில்லை, எரிபொருள் தீர்ந்தாலும் திறமையான விமானியால் இன்னும் சில மைல்கள் ஓட்டிச் செல்ல முடியும், அவ்வாறு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தேடுதல் குழு இப்போது கூறுகிறது.

கிட்டத்தட்ட கிரீஸ் நாட்டைப் போன்ற ஒரு பரப்பளவை அல்லது 1,20,000 சதுர கிலோமீட்டர்கள் இந்தியப் பெருங்கடல் பரப்பளவை தேடுதல் குழு கடந்த 2 ஆண்டுகளாக வலை வீசி எம்.எச்.370 பாகங்களை தேடி வருகிறது. இந்நிலையில் இந்த தேடுதல் படலமே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
இந்நிலையில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகள் கலந்தாலோசனைக்குப் பிறகு தேடுதல் பணி முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

தேடுதல் திட்டத்தின் இயக்குநர் பால் கென்னடி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘விமானம் கடலில் விழுந்ததாகத் தெரியவில்லை. வேறு எங்கோ சென்று விழுந்திருக்கலாம்” என்றார். விமானத்தில் அப்போது விமானி இருந்திருந்தால் நீண்ட தூரம் (120 மைல்கள் வரை) ஓட்டிச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. நாங்கள் தேடும் இடத்தைத் தாண்டியும் அதனை ஓட்டிச் சென்றிருக்க வாய்ப்புள்ளது, இதுதான் நாம் தர்க்கபூர்வமாக வரக்கூடிய இன்னொரு நிலவரமாக இருக்க முடியும்” என்றார்.

எம்.எச்.370 விமானத்திற்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் போகப்போகிறது. இதனையடுத்து விமானம் புறப்பட்டது முதல் சேரும் வரையிலான அனைத்துத் தரவுகளையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கலாம் என்று தெரிகிறது.

பால் கென்னடி கூறும் கோட்பாட்டை விசாரணை அமைப்புகளான அமெரிக்காவின் போயிங், பிரான்ஸின் தேல்ஸ் எஸ்.ஏ., தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு அமெரிக்க வாரியம், பிரிட்டிஷ் சாட்டிலைட் நிறுவனமான இம்மர்சாட், பிரிட்டன் விமான விபத்து விசாரணை கிளை அமைப்பு ஆகியவை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் கென்னடி கூறுவது என்னவெனில், “ஒரு திறமையான விமானி, எரிபொருள் தீர்ந்த நிலையிலும் கூட 120 மைல்களுக்கு விமானத்தை ஓட்டிச் செல்ல முடியும் என்பதை யாராலும் மறுக்கவும் முடியவில்லை. எனவே எம்.எச்.370 விமானத்திற்கு என்னதான் ஆனது? உலக வரலாற்றில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஒன்றாக மாறிவிடும் வாய்ப்பு இதற்கு உள்ளது.

Leave a Reply