shadow

எம்.ஜி.ஆர் புரியாத வகையில் பேசினாரா? பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய பேச்சு

premalathaமக்கள் திலகம் எம்.ஜி.ஆர், முதல்வராக இருந்த வரையில் தமிழக மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்து கொண்டிருந்தன. இன்றும் மக்கள் எம்.ஜி.ஆரை மறக்க தயாராக இல்லை. லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அவரை ஒரு கடவுளை போல எண்ணி, அவரது புகைப்படங்களுக்கு அவரது பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் மாலை போட்டு வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குண்டடி பட்ட பின்னர் எம்.ஜி.ஆர் பேசியது மக்களுக்கு புரியவே இல்லை என்றும், அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாத நிலையில் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமானார் என்றும் அதேபோல் விஜயகாந்தும் புரியாத வகையில் பேசி பிரபலமானதாகவும் தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசியுள்ளார்.

பிரேமலதாவின் இந்த பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குண்டடிபட்ட பின்னரும் எம்.ஜி.ஆர் பல திரைப்படங்களில் தெளிவாகத்தான் பேசினார் என்றும் திரைப்படங்களிலும் சரி, அரசியல் மேடைகளிலும் சரி எம்.ஜி.ஆர். பேச்சை புரியவில்லை என்றும் யாரும் கூறியது கிடையாது என்றும், அவர் எந்த நிலையிலும் விஜயகாந்தை போல உளறியது இல்லை என்றும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் கூறுகின்றனர்.

நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மறைந்த அன்று அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற விஜயகாந்த் என்ன உளறினார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் இதுபோன்று இடம் பொருள் தெரியாமல் பேசி வரும் விஜயகாந்தை எம்.ஜி.ஆரோடு ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது என்றும் எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply