ஜெயலலிதாவை மறக்கடித்த எம்ஜிஆர்: இயக்குனர் குஷி!

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் அவர்கள் இயக்கிவரும் ’தலைவி’ என்ற படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பது தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கங்கனா ரனாவத்தின் ஜெயலலிதா கெட்டப் வெளியானது. ஆனால் இந்த கஙகனாவின் லுக்கை பார்த்த பலரும் இது ஜெயலலிதா போல் இல்லையே என விமர்சனம் செய்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்ஜிஆர் கெட்டப்பில் அரவிந்தசாமி ஸ்டில் வெளிவந்து இதற்கு அப்படியே நேர்மாறான விமர்சனங்களை தந்தன. அரவிந்த்சாமி அச்சு அசலாக எம்ஜிஆர் போல் இருப்பதாகவும், எம்ஜிஆர்தான் அரவிந்த்சாமி போல் வேஷம் போட்டு வந்திருப்பதாகவும் பலர் கூறினர்.

எனவே ஜெயலலிதா கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத் லுக்கிற்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்கள் எம்ஜிஆர் கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமியால் மறக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இயக்குனர் விஜய் உள்பட படக்குழுவினர் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்

Leave a Reply