shadow

மெக்சிகோ: தண்ணீருக்கு இருந்த உலகின் மிகப்பெரிய குகை கண்டுபிடிப்பு

மெக்சிகோ நாட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீருக்குள் இருக்கும் குகைதான் உலகின் மிகப்பெரிய தண்ணீருக்குள் இருக்கும் குகை என்று தெரியவந்துள்ளது

கிழக்கு மெக்சிகோ கடல்பகுதியில் உள்ள குகை ஒன்று சமீபத்தில் நீர்மூழ்கி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையின் நீளம் 216 மைல்கள் அதாவது சுமார் 347 கிமீ ஆகும். இந்த பகுதியில் வாழ்ந்த பழமையான மாயா இனத்தவர்கள் இந்த குகையை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த குகை குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் இதன்மூலம் பல ஆச்சரியத்தக்க தகவல்கள் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு மெக்சிகோ அரசு அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply