shadow

மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி

மெக்சிகோவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் பராமரிப்பு பணிகளே இன்னும் முடிவடையாத நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 புள்ளியாக இருந்ததாகவும், இதனால் சில வினாடி நேரம் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் நள்ளிரவில் ஏற்பட்டதால் உடனடியாக வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து உயிர் பிழைக்க வெட்ட வெளிக்கு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ அரசுக்கு சொந்தமான ‘பெமெக்ஸ்’ என்ற எண்ணெய் நிறுவனம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மாகாணத்தின் அவசரகால மீட்பு படையினர் விரைந்தனர். இந்த நிலநடுக்கத்திலும் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை என்பது மட்டும் ஒரு சிறிய ஆறுதல்

Leave a Reply