shadow

மெக்சிகோவில் விமான விபத்து: 101 பயணிகளின் கதி என்ன?

மெக்சிகோ நாட்டில் விமானம் ஒன்று புறப்படும் தருவாயில் திடீரென விபத்துக்குள்ளாகியதால் அதில் பயணம் செய்த விமான ஊழியர்கள் உள்பட 100 பேர்களின் கதி என்ன? என்பது குறித்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 101 பேர்களுடன் ஏரோமெக்சிகோ என்னும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி கிளம்பியது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென விபத்தில் சிக்கி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் மெக்சிகோ ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *