மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 5313 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 3935 கனஅடியாக குறைந்துள்ளது. பாசனத்திற்கு விநாடிக்கு 23,923 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. தினமும் ஒரு அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைகிறது. நேற்று முன்தினம் 95.75 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 94.32 அடியாக சரிந்துள்ளது.

Leave a Reply