லண்டனில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்த பிரிட்டன் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் சிலரை ஆட்குறைப்பு செய்ய அரசு உத்தரவிட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த மெட்ரோ போக்குவரத்து திட்டத்தில் திடீரென ஆட்குறைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று திடீரென வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குட்பட்டனர்.
ஊழியர்களின் 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு மெட்ரோ ரயில்வேயின் அனைத்து யூனியன்களும் ஆதரவு கொடுத்துள்ளதால் லண்டனில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக லண்டன் பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்தது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு அடைந்தது. வேலைநிறுத்தம் காரணமாக திடீரென அதிகரித்த பயணிகளின் நலன் கருதி லண்டன் பேருந்து போக்குவரத்து சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து நிலைமையை சரிசெய்து வருகிறது.
மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் 11 மற்றும் 14ஆம் தேதிகளில் மீண்டும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்ததால், வேலைநிறுத்தத்தை கைவிட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் டேவிட் கேமரூன் ரயில்வே ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.