shadow

இந்த வாரத்தில் ‘மெர்சல்’ டீசர்: தயாரிப்பாளர் சூசக தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அடுத்து இந்த படத்தின் டீசர் எப்போது வெளிவரும் என்று அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டால் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி தனது டுவிட்டரில் மெர்சல் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்து சூசகமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

‘மெர்சல்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தயாராகி வருவதாகவும், தற்போது அதன் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிந்தவுடன் டீசர் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஹேமாருக்மணியின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக இந்த வாரத்திலேயே இந்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.

Leave a Reply