shadow

விஜய் ரசிகர்களுக்கு இன்று இரட்டை விருந்து

தளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு ‘நீதானே’ பாடல் மற்றும் ‘மெர்சல் அரசன்’ பாடல் ஆகிய இரண்டு பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த இரண்டு பாடல்களின் லிரிக் வீடியோ வெளியான ஒருசில மணி நேரத்தில் அதையும் உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வர விஜய் ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.

Leave a Reply