லாபமோ, நஷ்டமோ ‘மெர்சல்’ எங்கள் பெருமைக்குரிய படம்: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

லாபமோ, நஷ்டமோ ‘மெர்சல்’ எங்கள் பெருமைக்குரிய படம்: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வசூலை கொடுத்தபோதிலும் அந்த படம் தயாரிக்க எடுத்து கொண்ட காலம் அதிகம் என்பதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என கோலிவுட் திரையுலகினர் பலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மெர்சல் குறித்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தனது டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியபோது, எங்களுக்கு ‘மெர்சல்’ படம் மெகா ஹிட் . தற்போது ‘மெர்சல்’ படம் எங்களுக்கு பெருமை என்றும், தளபதி விஜய்யுடன் பணியாற்றியது எங்களுக்கு பெரிய மரியாதை என்றும் டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்கள்.

மெர்சல் படம் லாபமா நஷ்டமா? என்பதை இந்த படத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கருத்து கூற வேண்டாம். அந்த படம் எவ்வளவு லாபம் சம்பாதித்து கொடுத்தது என்பது அந்த படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும் என்று தேனாண்டாள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்

https://twitter.com/ThenandalFilms/status/978596567836868609

Leave a Reply

Your email address will not be published.