shadow

‘பாகுபலி 2’ படத்திற்கு இணையாகிறது விஜய்யின் ‘மெர்சல்’

இளையதளபதி விஜய்யின் மெர்சல்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் ஆச்சரியத்தக்க வகையில் நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ரிலீஸ் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது கேரள ரிலீஸ் உரிமையும் மிக அதிகமான தொகைக்கு விலை போயுள்ளது. இந்த உரிமையை குளோபல் யூனிடெட் மீடியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி அவர்கள் உறுதி செய்துள்ளார். இதே நிறுவனம்தான் கேரளாவில் ‘பாகுபலி 2′ படத்தை ரிலீஸ் செய்தது என்பதால் பாகுபலி 2’ படத்திற்கு இணையாக இந்த படமும் கேரளா முழுவதும் புரமோஷன் செய்யப்படவுள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான ‘மெர்சல்’ படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply