shadow

‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டம்: ரசிகர்கள் உற்சாகம்

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளிவந்து, பாஜக தமிழக தலைவர்களின் புண்ணியத்தில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் இன்று இந்த படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் #Mersal100Days என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply