10 வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சிக்கலா? பரபரப்பு தகவல்

பொதுத்துறை வங்கிகளான 10 வங்கிகள் ஏப்ரல் 1 முதல் நான்கு வங்கிகளாக மாற்றப்பட உள்ள நிலையில் அதன் வாடிக்கையாளர்களை பயமுறுத்தும் வகையில் சில தகவல்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் வங்கியும் யுனைடெட் இந்தியா வங்கியும் இணைகிறது. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் ஆந்திரா மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளும் இணைகின்றன. அதேபோல் இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைகிறது. இதனால் 10 பொதுத்துறை வங்கிகள் நான்கு வங்கிகளாக மாறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இணையும் வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இணைப்புக்கு முன் செய்ய வேண்டியது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், வங்கி வாடிக்கையாளர்களை பயமுறுத்தும் வகையில் ஒருசில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. வங்கிகள் இணைப்புக்கு பின் ஒருங்கிணைந்து செயல்பட ஆறு மாதம் முதல் ஓராண்டு காலம் பிடிக்கும். மேலும் இணைப்புக்கு முன் அல்லது இணைப்புக்கு பின் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை குறித்து வங்கிகள் தரப்பில் முறைப்படி தெரிவிக்கப்படும்; அப்போது வாடிக்கையாளர்கள் அவற்றை செய்தால் போதும். மற்றபடி வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்

Leave a Reply