shadow

மெர்க்குரி: திரைவிமர்சனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, பிரியா பவானிசங்கர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்க்குரி’. வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை பார்ப்போம்

பிரியா பவானிசங்கர் உள்பட ஐந்து நண்பர்கள் மலைப்பகுதி ஒன்றுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு பிரியாவிடம் தனது காதலை தெரிவிக்கின்றார் அந்த நான்கு இளைஞர்களில் ஒருவர். பிரியாவும் அவரை மனதிற்குள் காதலிப்பதால் காதலை ஏற்று கொள்கிறார். காதல் வெற்றி அடைந்த சந்தோஷத்தில் நண்பர்களுடன் காரில் வெளியே செல்கின்றனர் காதல் ஜோடி.

அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஒன்று நேர்கிறது. இந்த விபத்தில் பிரபுதேவா உயிரிழக்கின்றார். இதன்பின்னர் நடைபெறும் திடுக்கிடும் சம்பவங்கள், பிரபுதேவா யார், ஐந்து பேர்களுக்கு என்ன ஆச்சு? என்பதுதான் மீதிக்கதை

பிரியா பவானிசங்கர் உள்பட ஐந்து பேர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காது கேட்காத வாய் பேசமுடியாத கேரக்டர்களில் இந்த ஐந்து பேர்கள் நடித்திருந்தாலும் வசனம் இல்லை என்ற குறையே இல்லாமல் சைகையின் மூலம் வசனங்களை பார்வையாளர்களுக்கு புரிய வைத்துவிடுகின்றனர். இருப்பினும் புரியாதவர்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சப்டைட்டில் போடுகிறார்.

விபத்தில் இறந்து பேயாக வரும் பிரபுதேவா, ஐவரில் ஒவ்வொருவராக கொலை செய்கிறார். இவர்களில் ஒருவர் மட்டும் தப்புகிறார் அவர் யார் என்பதை திரையில் காண்க. பிரபுதேவா தனது மிரட்டலான நடிப்பின் மூலம் நடிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளார்.

சந்தோஷ் நாராயணனின் இசை ஒரே இரைச்சல். மற்றபடி ஒளிப்பதிவாளர் திரு, எடிட்டர் விவேக் ஹர்சன் ஆகியோர் தங்கள் பணியை கச்சிதமாக முடித்துள்ளனர்.

தற்போதைய கார்ப்பரேட் கம்பெனிகளால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் எந்த அளவுக்கு தீங்கு ஏற்படுகிறது என்ற சமூக கருத்தை த்ரில்லிங் கலந்து கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். மொத்தத்தில் ஒரு நல்ல த்ரில்லிங் படத்தை ரசிக்க நினைப்பவர்கள் தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம்

ரேட்டிங்: 3/5

Leave a Reply