shadow

மேனகா காந்தியின் ஜல்லிக்கட்டு கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு

pon.radhaஜல்லிக்கட்டு ஒரு ஆபத்தான் போட்டி, அதை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவின் அமைச்சர் மேனகா காந்தி ஒருபுறம் பேட்டியளித்து வரும் நிலையில் இன்னொரு புறம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என இன்னொரு பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் நடுநிலைவாதிகள் பாஜகவை சந்தர்ப்பவாத கட்சி என விமர்சனம் செய்கின்றனர்.

நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, “தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என மத்திய அமைச்சர் மேனகா காந்தி சென்னையில் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

நாம் விளையாடும் பல விளையாட்டுகள் ஆபத்தானவையே. கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகள்கூட ஆபத்தானவைதான். வீரம், சவால் நிறைந்த விளையாட்டுகள் எனக் கூறி அதனை நாம் விளையாடுகிறோம். எந்த சவாலையும் எதிர்நோக்குவதுதான மனித வாழக்கை. அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

யார் எந்தக் கருத்தை தெரிவித்தாலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவின்போது நடைபெறும்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கன்னியாகுமரி கடலின் நடுவே விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது’ என்று கூறினார்.

Leave a Reply