shadow

honey bathஉலக அளவில் பிரபலமான புகைப்பட கலைஞர் ஒருவர் தேனில் குளிக்கும் ஆண், பெண், குழந்தை மற்றும் நாய் ஆகியோர்களின் புகைப்படங்களை வித்தியாசமாக எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாம் குரூஸ் உள்பட பிரபல ஹாலிவுட் படங்களுக்கு ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றி பல விருதுகளை பெற்றுள்ள பிளேக் லிட்டில் என்ற புகைப்பட கலைஞர் சமீபத்தில் வித்தியாசமான ஒரு புகைப்பட ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பத்தில் ஆண், பெண், குழந்தை ஆகியோர் நிர்வாணமாக தேனில் குளித்து கொண்டிருக்கின்றனர்.

honey bath 4

இந்த ஆல்பத்தில் உள்ள புகைப்படங்கள் தற்போது உலக அளவில் பிரபலமாகி பல சமூக வலைத்தளங்களிலும், இண்டர்நெட்டிலும் பரவி வருகிறது. வித்தியாசமான கோணத்தில் போஸ் கொடுத்துள்ள அனைவரும் இந்த புகைப்படத்தில் நிர்வாணமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்பட ஆல்பத்தில் ஒரு நாயும் தேனில் குளித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய நண்பர் ஒருவர் சமீபத்தில் தேனில் குளிக்கும்போது பார்த்ததாகவும், இதனால் தனக்கு இந்த ஐடியா வந்ததாகவும் பிளேக் லிட்டில் கூறியுள்ளார். 11/2 வயது குழந்தை முதல் 85 வயது பெண்கள் வரை இந்த ஆல்பத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். உலக அளவில் பிரபலமாகியுள்ள பிளேக் லிட்டில் அவர்களின் புகைப்படங்களை நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

honey bath 2 honey bath 3  honey bath 5 honey bath 6 honey bath 7 honey bath 8

Leave a Reply