shadow

ஆஸ்திரேலியாவில் ஒரு அபார ஞாபசக்தி கொண்ட பெண். புதிய தகவல்

australiaநம்மூரில் உள்ள சிறுவர், சிறுமிகள் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிவிப்பது போல ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண் ஹாரிபாட்டர் நாவல்களின் அனைத்து பாகங்களையும் வரிவிடாமல் ஒப்புவித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.

இரண்டு வயதாக இருக்கும்போதே உலக வரைபடத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களையும் கூறிய இவர் அபார ஞாபகசக்தி படைத்தவராக உள்ளார். தற்போது இவர் ஹாரிபாட்டர் நாவலின் அனைத்து பாகங்களையும் ஒருவரி விடாமல் மனப்பாடம் செய்துள்ளார். அவருடைய பெயர் பெக்கி ஷராக்.

இதுகுறித்து “சேனல் 9′ தொலைக்காட்சிக்காக பெக்கி ஷராக்கை பேட்டி எடுத்த அலிஸன் லங்டன் கூறிய விவரங்கள் பின்வருமாறு:

பெக்கி ஷராக்குக்கு மிகவும் பிடித்த ஹாரி பாட்டர் நாவல்களை முழுவதுமாக ஒப்பிக்க முடியும் என்று அவர் கூறியதை பரிசோதிக்க விரும்பினேன். அதற்காக, ஒரு நாவலை எடுத்து, கைக்கு வந்த பக்கத்தைப் பிரித்து, அதிலிருந்த ஒரு வரியைப் படித்தேன். உடனடியாக அந்த வரி எத்தனையாவது அத்தியாயம் என்பதையும், அத்தியாயத்தின் பெயரையும் கூறிய பெக்கி ஷராக், முதல் வரியிலிருந்து கடகடவென்று சொல்ல ஆரம்பித்தார். நான் “போதும்’ என்று சொல்லும்வரை ஒரு வரி விடாமல் அவர் ஒப்பித்துக் கொண்டிருந்தார். இந்த வகையில், 7 ஹாரி பாட்டர் நாவல்களிலும் இடம்பெற்றுள்ள அனைத்து வரிகளும் பெக்கி ஷராக்குக்கு அத்துபடி ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.

அவருக்கு ஹைலி சுப்பீரியர் ஆட்டோபயோகிராஃபிகல் மெமரி’ (ஹெச்.எஸ்.ஏ.எம்.) என்ற விநோத உடற்கூறு நிலையே அவருடைய இந்த அபார ஞாபக சக்திக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் ஹெச்.எஸ்.ஏ.எம். நிலை கண்டறியப்பட்ட ஒரே நபர் பெக்கி ஷராக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply