shadow

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்குவயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், டி.ராஜேந்தருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இன்று டி.ராஜேந்தரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அவர்களுடன், டி.ராஜேந்தர் மகன் குறளரசன் உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.