நடிகை மீரா ஜாஸ்மீனுக்கு, துபாய் என்ஜினீயர் ஜான் டைட்டஸ் அவர்களுக்கும் நாளை திருமணம் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் முன்னதாக திடீரென நேற்று இரவே மீரா ஜாஸ்மீனும், ஜான் டைட்டஸும் ரகசிய திருமணம் செய்துகொண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா ஜாஸ்மின் அளித்த பேட்டியில், தனது திருமணம் பிப்ரவரி 12ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருக்கும் எல்.எம்.எஸ் ஆலயத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் திடீரென நேற்று சார்பாளர் அலுவலகத்தை சேர்ந்த ஒரு அதிகார் மீரா ஜாஸ்மின் வீட்டிற்கு இருவருக்கும் பதிவு திருமணத்தை சட்டப்படி செய்துவைத்தார். அவசர அவசரமாக இரண்டு நாட்களுக்கு முன்பே திடீரென பதிவு திருமணம் செய்துகொண்டது ஏன் என்பது குறித்து மீரா ஜாஸ்மின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் விளக்கமளிக்க மறுத்துவிட்டனர்.

ஆனாலும் திட்டமிட்டபடி நாளை கோவிலில் திருமணம் நடக்கும் என்பதை மட்டும் இருவீட்டாரும் கூறியுள்ளனர். மீரா ஜாஸ்மினின் பழைய காதலர் திருமண தினத்தன்று பிரச்சனை செய்வார் என்று கருதியே முன்னெச்சரிக்கையாக இரண்டு நாட்களுக்கு முன்னரே பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply