அந்த நாளில் என் இதயமே நின்னு போச்சு!

 நடிகை மீனா பதிவு

ரஜினியுடன் எஜமான், முத்து, வீரா கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி அஜித்துடன் சிட்டிசன், வில்லன், ஆனந்த பூங்காற்றே, விஜய்யுடன் ஷாஜஹான் ஒரு குத்துப்பாட்டு என 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கலக்கியவர் நடிகை மீனா

இந்த நிலையில் தற்போது அவர் இந்த கொரோனா விடுமுறையில் தனது மலரும் நினைவுகளை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்

அந்த வகையில் பெங்களூரில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்டபோது பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் அவர்களை சந்தித்தது குறித்து மீனா, புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்

ஹிருத்திக் ரோஷனுக்கு கை கொடுப்பது போல் உள்ள அந்த புகைபடத்தில் நடிகை மீனா கூறியபோது எனது விருப்பத்திற்குரிய நடிகர் ஹிருத்திக் அவர்களை பார்த்து அந்த கணம் என் இதயமே நின்று போனது போல் இருந்தது என்னுடைய ஆல் டைம் பேவரைட் அவர்தான் பெங்களூரில் ஒரு திருமணத்தின் போது இந்த சந்திப்பு என்று அவர் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்

மீனாவும் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் மீனாவின் மகள் நைனிகா ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.