shadow

p33a

தூதுவளையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவப் பயன் தரும். இலையினால் உண்டிக்குச் சுவையும் கிடைத்து, நெஞ்சின் சளியெல்லாம் கரையும். பூவும் மொத்த கீரையுமே ஆண்மையைப் பெருக்கும்; காய், வாத, பித்த, கபம் எனும் முக்குற்றங்களையும் நீக்கும். வேரும் கொடியும் இருமல், இரைப்பு முதலிய ஐயப்பிணிகளைப் போக்கும்.

​காயை வற்றலிட்டுப் பாகம் செய்து உண்டுவர, ஐய நோய், அழல் நோய், வளி நோய் முதலியன அணுகாது. குடல்வாதம் நீங்கும்.

குழந்தைகளுக்கு காதில் சீழ் வரும் நோய்க்கு, தூதுவளை ​இலையைப் பிழிந்து, காதில் துளியாக விட, நோய் நீங்கும். இலையைத் துவையல், குழம்பு முதலியன செய்து உண்ண, சளி வெளியேற மறுத்து, நெஞ்சை அடைத்து வரும் கோழைக்கட்டு நீங்கி இருமலை ஓடிப்போகச் செய்யும். ​இதனை நெய் சேர்த்துக் காய்ச்சி, ஐயநோய், இருமல் நோய்களுக்கு சித்த மருத்துவர் கொடுப்பார்.

​தைராய்டு கட்டிகள்

இதன் இலையை கஷாயமாக்கி அருந்திவந்தால், தைராய்டு கட்டிகள் பாதிப்பு மறைந்து, தைராய்டு சீர்படும் எனச் சொல்லப்படும் கருத்துகள் ஆய்வுக்கு உரியவை.

தூதுவளை இலையைச் சேகரித்து, சுத்தம் செய்து, 15 முதல் 50 கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து, ரொட்டியாகத் தயாரித்து, காலை உணவாக, கப நோய்க்கும் தொண்டை நோய்க்கும் சாப்பிடச் சொல்கிறது சித்த மருத்துவம்.

‘20 கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து, வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டுவந்தால், நோய்த் தடுப்பாகவும், நினைவாற்றல் பெருகவும் செய்யும்’ என்கின்றன சில அனுபவக் குறிப்புகள். மேலும், வாயுப் பிரச்னையைப் போக்கும்.  உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டுவந்தால், உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மைசக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

​​​தூதுவளையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். அதனால், தூதுவளைக் கீரையைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்து, நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டுவர வேண்டும்.

மூலிகை என்றாலே, எங்கோ எளிதில் ஏற முடியாத மலையில் வளரும் என்ற தவறான நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், மிக எளிதாக வளரும் இந்தக் கீரையை வீட்டுத் தோட்டத்தில், மாடித்தோட்டத்தில்கூட வளர்க்க முடியும். தூதுவளை போன்ற அரிய குணம் உடைய மூலிகைகள் பல நம் நாட்டு மருந்துக்கூட்டத்தில் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தூதுவளை வெறும் கொடி மட்டும் அல்ல. அது, நம் ஆரோக்கியத்தின் தூதுவன்.

Leave a Reply