மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு?

படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது

மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெரும் பரபரப்பில் உள்ளனர்

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்நிலையில், மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.