காலியாகிறதா மதிமுக கூடாரம்? வைகோ அதிர்ச்சி

காலியாகிறதா மதிமுக கூடாரம்? வைகோ அதிர்ச்சி
russia
கடந்த 13-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு கட்சியில் இருந்து விலகி,  கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரை அடுத்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் கு.சீ.வெ. தாமரைக்கண்ணன், துணை செய லாளர் எஸ்.வி.ராஜேந்திரன், உள்பட பலர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி முன்னிலை யில் நேற்று திமுகவில் இணைதனர். ஒரே வாரத்தில் இரண்டு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்திருப்பது மதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் இன்று திடீரென மதிமுக பொருளாளர் மாசிலாமணி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொருளாளர் மாசிலாமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக மதிமுக தலைமை எடுத்த முடிவு தனக்கு அதிருப்தி அளித்ததாகவும் மீண்டும் மதிமுகவில் சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் மதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்னும் ஒருசில முக்கிய தலைவர்களும் இன்னும் ஒருசில நாட்களில் விலகவுள்ளதாக வந்த செய்தியை அடுத்து தேர்தலுக்குள் மதிமுக கூடாரம் காலியாகிவிடும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.