மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு: சென்னை எந்த பிரிவில் தெரியுமா?

மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசின் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி வேலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது

இதேபோல் திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு, மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்த ஒன்பது மாநகாட்சி தவிர மீதமுள்ள அனைத்து மேயர் பதவிகளும் பொதுப்பிரிவு என இட ஒதுக்கீடு அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து சென்னை உள்பட மற்ற மேயர் பதவிகள் பொது பிரிவில் வருகிறது. இதனால் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply