மகனுக்காக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மொரிஷியஸ் பிரதமர்

மகனுக்காக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மொரிஷியஸ் பிரதமர்

மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் அனிருத் ஜகந்நாத் நேற்று திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மகனுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது

ராஜினாமா முடிவை அறிவித்தது மட்டுமின்றி உடனே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் அமீனா குரீப் ஃபகீமிடம் அவர் அளித்தார். இதனையடுத்து அவரது மகன் பிரவீந்த் ஆட்சிப் பொறுப்பேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இதுநாள் வரை தந்தையின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணிபுரிந்த பிரவீந்த் ஜகந்நாத் ஆளும் கட்சியான தீவிர சோஷலிச கட்சியின் தலைவராகவும் அவர் உள்ளார். மேலும் கட்சியினர் பிரவீந்த் ஜகந்நாத் தலைமையை முழு மனதோடு ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த பிரதமர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சியைக் கலைத்துவிட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.