பின்லேடன் கொலை குறித்த புத்தகத்தின் பதிப்புரிமை தொகையை அரசுக்கு வழங்கிய எழுத்தாளர்

binladenஅல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவஎ ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட் புத்தகத்திற்கு பதிப்புரிமைத் தொகையாக கிடைத்த 70 லட்சம் டாலர்களை அந்த புத்தகத்தின் ஆசிரியர் அமெரிக்க அரசுக்கு வழங்கியுள்ளார்.

‘நோ ஈசி டே’ என்ற புத்தகம், பின்லேடனை அமெரிக்காவின் சீல் படை வேட்டையாடியது குறித்த உண்மையை விளக்கும் புத்தகம். இந்த புத்தகத்தை சீல் படை வீரர்களில் ஒருவரான மேத்யூ பிஸொனேட் என்பவர் எழுதினார். சமீபத்தில் இந்த புத்தகம் வெளீயானது. இந்த புத்தகத்தில் அவர் தனது துப்பாக்கியில் இருந்து பாய்ந்துச் சென்ற குண்டுகள்தான் ஒசாமாவை பரலோகத்துக்கு அனுப்பியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்லேடன் யாரால் கொல்லப்பட்டார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எனவே அவர் மீது தேசத்துரோகத்துக்கு நிகரான குற்றச்சாட்டை சுமத்தி அமெரிக்க கடற்படை தலைமையகம் விசாரணை செய்து வந்தது.

இந்நிலையில் தனது வழக்கறிஞரின் தவறான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப்படி இந்த தவறை செய்துவிட்டதாகவும் இந்த புத்தகத்தின் மூலம் கிடைத்த பணப்பலன்கள் அனைத்தையும் அமெரிக்க அரசுக்கு விட்டுக் கொடுப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் விட்டுக்கொடுப்பதாக கூறிய தொகை 67 லட்சம் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply