இதுதாண்டா போஸ்டர்: மாஸ்டர் மூன்றாவது லுக்கை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

இதுதாண்டா போஸ்டர்: மாஸ்டர் மூன்றாவது லுக்கை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘மாஸ்டர்’ படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியான நிலையில் இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் கொண்டாடி வருகின்றனர்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் அட்டகாசமான மற்றும் ஆக்ரோஷமான போஸ் கொடுத்துள்ள இந்த போஸ்டர் நிச்சயம் தமிழ் திரையுலகை ஆச்சரியப்படுத்தும் என தெரிகிறது

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந்த போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. அதுமட்டுமின்றி இப்படி ஒரு அட்டகாசமான போஸ்டர் டிசைன் செய்தவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது தாண்டா போஸ்டர் என விஜய் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்

Leave a Reply