கொரோனா வைரஸ் எதிரொலி: மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறதா?

கொரோனா வைரஸ் எதிரொலி: மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறதா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில் திடீரென தற்போது கொரோனா வைரஸ் மூலம் இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கேரளாவில் மார்ச் 31-ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட அம்மாநில திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகம் உள்பட வேறு சில மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் திரையரங்குகள் திடீரென மூடப்பட்டால் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற அச்சம் தற்போது விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை என்பதால் திட்டமிட்டு மாஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply