இதுவரை வெளியாகாத விஜய் புகைப்படம்: மாஸ்டர் தயாரிப்பாளர் ரிலீஸ்

தளபதி விஜய் திரையுலகில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் ஆகியதை ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வேற லெவல் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது: 29 வருடங்கள் உங்களுடைய பயணத்தில் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பும், தொழில் நேர்த்தியும் உண்மையிலேயே எங்களை போன்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

நான் உங்களிடம் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள் என்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றும் விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.