மாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்

மாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்

மாஸ்டர் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட அனைவருமே ஓரிரு நிமிடங்கள் மட்டுமே மேடை நாகரீகம் கருதி பேசிய நிலையில் தயாரிப்பாளர் பிரிட்டோ மட்டும் சுமார் அரை மணி நேரம் பேசி அனைவரையும் வெறுப்பேற்றினார். குறிப்பாக அவருடைய பேச்சில் சுவாரஸ்யமும் இல்லை என்பதால் ஒரு கட்டத்தில் போரடித்தது. இதில் ஒரு குட்டிக்கதையை வேறு கூறி பொறுமையை சோதித்தார்.

இடையில் தொகுப்பாளர் பாவனா இடைமறித்து அவருடைய பேச்சை முடிக்க நினைத்தபோதிலும் அவர் விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அறிவுரை என்ற பெயரில் அவருடைய பேச்சை கேட்ட அரங்கில் இருந்தவர்களுக்கே பொறுமை இழந்தது. அவருடைய பேச்சில் சிறிதளவு மதச்சாயமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஜய்சேதுபதி பேச்சை கேட்க அனைவரும் ஆவலுடன் இருந்த நிலையில் பொறுமையை சோதிக்கும் வகையில் பேசிய தயாரிப்பாளரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.