மாஸ்டர் இசை வெளியீடு கேரளாவிலா? பரபரப்பு தகவல்
தளபதி விஜய் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியதை அடுத்து அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித் துறையை அறிக்கை வெளியிட்டுள்ளது
இந்த நிலையில் வருமானவரித் துறை ரெய்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய்யின் மாஸ் பேச்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்த தமிழகத்தில் இடம் கிடைக்காது என்றும் அதற்கு அரசியல் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஒருவேளை தமிழகத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த இடம் கிடைக்காவிட்டால் கொச்சியில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
கொச்சியில் உள்ள ஜெ.எல்.என்.என்ற ஸ்டேடியத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மிகப் பிரம்மாண்டமான இந்த ஸ்டேடியத்தில் தான் விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் கொச்சியில் இசை வெளியீட்டு விழா நடந்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது