சன் டிவியில் விஜய்யின் குட்டிக்கதை: அதிரடி ஆரம்பம்

விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது

இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவி நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சென்று இசை வெளியீட்டு விழாவை பார்க்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் உட்கார்ந்தபடியே நேரடியாக இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறும் கதையை கேட்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது ஆரம்பம் தான் என்றும் இன்னும் அடுத்தடுத்து மாஸ்டர் படத்தின் அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்படுகிறது

Leave a Reply