எத்தன படத்தோட காப்பி! மாஸ்டர் லுக்கை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் நேற்று வெளியானது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக இருக்கும் காட்சி இருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும் விஜய்யை பிடிக்காதவர்கள் இந்த போஸ்டர் பல படங்களின் காப்பி என பதிவு செய்துவருகின்றனர்

ஏற்கனவே இதே போன்ற போஸ்டர்கள் கமல்ஹாசனின் தேவர் மகன், அஜித்தின் என்னை அறிந்தால், எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி, விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, ஜீவாவின் சிங்கம் புலி, ரஜினிகாந்த்தின் 2.0 ஆகிய படங்களில் இதே போன்ற போஸ்டர்கள் வெளிவந்ததாகவும், அந்த போஸ்டரை காப்பி அடித்தால் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் டிசைன் செய்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்

ஆனாலும் மாஸ்டர் படத்தின் போஸ்டருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *