shadow

அஜித், விஜய் போல நயன்தாராவுக்கு ஓப்பனிங் சாங்.

Nayanthara_Manirathnamரஜினி, அஜித், விஜய் படங்களில் ரெகுலராக ஒப்பனிங் சாங் வைப்பது இயக்குனர்களின் வழக்கம். அதுவும் இந்த பாடல்கள் அதிக பொருட்செலவில் மாஸ் ஆக படமாக்கப்படுவதால் ரசிகர்கள் படத்தின் ஆரம்பத்திலேயே உற்சாகம் அடைந்துவிடுவார்கள்.

இந்நிலையில் இதுவரை பெரிய ஸ்டார்களுக்கு மட்டுமே ஓப்பனிங் சாங் வைக்கப்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக நடிகை நயன்தாராவுக்கு ஒரு ஓப்பனிங் சாங் வைக்கப்பட்டுள்ளது.

‘மாயா’ படத்திற்கு பின்னர் நயன்தாரா நடிக்கும் திகில் படமான ‘டோரா’ படத்தில்தான் இந்த ஓப்பனிங் சாங் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள செட் ஒன்றில் நயன்தாரா கவர்ச்சி உடையில் ஓப்பனிங் சாங்கில் நடனமாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா, ஹரீஷ் உத்தமன், ஷான் உள்பட பலர் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Leave a Reply