சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம்

மீறினால் கடும் நடவடிக்கை

சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயமாகிறது என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ளவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் வாகனத்தில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டு போன்றவை ரத்து செய்யப்படும் என்றும் – பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மக்கள் ஊரடங்கிற்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்பதே உண்மையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.