ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்

ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் தற்போது ஜோர்டனில் நடைபெற்ற தகுதிப்போட்டியிலும் வெற்றி பெற்று அறையிறுதியில் நுழைந்தார். இதன் மூலம், டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கு மேரிகோம் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மேரிகோம், காலிறுதி போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையுடன் மோதி 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இதனையடுத்து அவர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்ற மேரிகோம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply